கத்தி. உருட்டு கட்டை போன்றவற்றால். தாக்கிவிட்டு பணம் செல்போன். ஆகியவற்றை வழிபறி
சென்னை செப்டம்பர்.11. சென்னை திருவொற்றியூர் பகுதியில்(கண்டெய்னர்) கனரகவாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து நடைபெறும் வழியாக சம்பவங்கள். சென்னை திருவொற்றியூர் தாங்கள் அருகே கண்டெய்னர் லாரியோடு காத்திருந்த பரணி டிரான்ஸ்போர்டு ஓட்டுனர் தினேஷ் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கோண்டு கை மற்றும் கால் பகுதியில் வெட்டி விட்டு ஓடியுள்ளார்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் போக்குவரத்து காவலர் குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார் குமார் துரத்திசென்று வெட்டிவிட்டு ஓடிய ராம்குமார் (வயது 22) என்பவரை பிடித்துள்ளார் பிடிபட்டவனை விசாரித்து மதன் (வயது 32) என்பவனை பிடித்துள்ளார்கள். வெட்டுகாயமடைந்த இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அங்கிருந்த லாரி டிரைவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் .திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் கண்டெய்னர் லாரி ஓட்டி வருகையில் பலஇடங்கள் இருள் சூழ்ந்து காணப்படும். அந்த இடங்களில் மர்ம நபர்கள் சிலர் ஒளிந்திருந்து கஞ்சா உட்கொண்ட நிலையில் போதையோடு திடீரென முன்னாள் நின்று கண்டு கத்தி. உருட்டு கட்டை போன்றவற்றால். தாக்கிவிட்டு பணம் செல்போன். ஆகியவற்றை வழிபறி செய்து விடுவதாகவும் சாட்டினார்கள் மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல வழிபறி கொள்ளையர்கள் ஏழுமலை என்ற காவலரை வெட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சட்டம் ஒழுங்கு காவலர்கள் இரவு நேர ருந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற வழிபறி கோள்ளையிலிருந்து தப்பிக்க முடியுமெனவும் அவர்கள் கூறினார்கள் இது குறித்து இணை ஆணையர் பகலவன் மற்றும் துணை ஆணையர் அமுல்ராஜ் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தார்கள் :
செய்தியாளர்:M.மதன்குமார்