ஜான் பாண்டியன் சடகோப ராமானுஜ ஜீயருடன் தனி அறையில் அனர மணி நேரம் திடீர் சந்திப்பு

விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் மனவாள மாமுனிகள் மடத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருடன் தனி அறையில் அனர மணி நேரம் திடீர் சந்திப்பு நடத்தி பின்னர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் .
சந்திப்புக்கு பின் பின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியார்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கோயிலில் இருந்து இந்து அறநிலைய துறை வெளியேற வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு , இப்போது அதைப் பற்றி பேச விரும்பவில்லை, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. அது அவரின் சொந்த கருத்து . மனிதரின் கையில் கிடையாது . ஆண்டாள் கையில் உள்ளது என தெரிவித்தார் .

மேலும் விநாயகர் சதுர்த்தி அரசு கெடு பிடி காட்டுவது குறித்த கேள்விக்கு, இந்து மக்களிடம் ஒற்றுமையின்மையே காரணம் அதனால் அடுத்தவர்கள் தலையிடுகிறார்கள் என கூறினார்

பின்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்

தான் முதன் முதலில் ஆண்டாளை தரிசிக்க வந்துள்ளேன்.

டீசல் , பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு தான் முடிவு கட்ட வேண்டும். ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் அறிவிக்கட்டும் , தனித்தா கூட்டணியா என்பது அந்த சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.

தமிழக அரசின் செயல்பாடு ஒரு சில நல்லது நடக்கிறது. ஒரு சில பகுதிகளில் தவறும் நடக்கிறது.

அதிமுக வை மத்திய அரசு இயக்குகிறது எப்படி சொல்ல முடியும். பாஜக ஆட்சி கிடையாது. அதிமுக ஆட்சிதான் நடக்கிறது. ஒரு சில கட்சிகள் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, வேலை வெட்டி இல்லாமல் இறங்குகிறார்கள் . படத்தில் வாய்ப்பு இல்லை என்பதால் வருகிறார்கள்.
மக்களை ஏமாற்ற நடிக்க வருகிறார்கள்.

ரஜினி பா ஜ க உடன் இணைவது அவரது விருப்பம் என தெரிவித்தார்.

(விக்னேஷ் ராஜா நிருபர் விருதுநகர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *