வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சீர்குலைக்க முயற்சி
வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – கெஜ்ரிவால் வேதனை.
புதுடில்லி; டில்லிவாசிகளுக்கு வீடு தேடி செல்லும் சேவை திட்டத்தினை சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
ரேஷன், திருமணச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து சேவைகள் வழங்கப்படும் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இந்த சேவைகளை பதிவு செய்ய கால் சென்டர் எண் 1076-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் பயணிகளின் இல்லத்திற்கே சென்று சேவை அளிக்கப்படுகிறது. இதற்கு 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியதாவது: அரசியல் காரணங்களுக்காக வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது .அரசாங்கத்தை நிர்வகிக்கும் எந்த அரசியல் கட்சியையும் பொருட்படுத்தாமல் பொது நலன் பணிகள் அனைத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்”என பதிவிட்டுள்ளார்.