கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை “ஒசாமா” என்று விமர்சித்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் விசாரணை
கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை “ஒசாமா” என்று விமர்சித்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் விசாரணை
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை “ஒசாமா” என்று விமர்சித்த தங்கள் அணி வீரர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது.
2015ல் ஆஷஸ் தொடரின் போது, தம்மை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒசாமா என்று அழைத்ததாகவும், இது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் மொயீன் அலி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், தீவிரமாக விசாரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இதுபோன்று நடந்து கொள்ளும் வீரர்களை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது