டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை : தி.மு.க. குற்றச்சாட்டு
நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை : தி.மு.க. குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
தாம் பதவியேற்ற பின்னர், பொதுப்பணித்துறையில் ஒரு சிங்கிள் டெண்டர்கூட கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்ததினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் சிங்கிள் டெண்டர் விடப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் இதுவரை சிங்கிள் டெண்டர் விடவில்லை என்று தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்துவிட்டதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சியை அழிக்க நினைக்கும் டிடிவி தினகரனை மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.