இதய நோய்களுக்கான நவீன மருத்துவ சிகிச்சைப் பயிற்சி மையம்
அப்பல்லோ மருத்துவமனை இதய நோய்களுக்கான நவீன மருத்துவ சிகிச்சைப் பயிற்சி மையத்தை சென்னையில் தொடங்கியுள்ளது
இந்த்யாவில் நிகழும் அதிக மரணங்கள் இருதய நோயினால் தான் நிகழ்கின்றன என்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் வயதானவர்களின் என்னிக்கை கூடுதலாகிகொண்டே இருக்கின்றது, இதில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை இவர்கலின் பெரும்பாலூருக்கு இருதய நோய் வர காரண்மாக இருக்கிறது. இதில் 30% பேர் மருத்துவமனையிலெயே உயிரிழக்க நேரிடுகிறது. மடுத்துவ அனுமதிக்கப்படும் நோயளிகளில் 20% பேர் இருதய செலிழப்பு காரணமாகவே அனுமதிக்கபடுகின்றனர். மிட்ரா கிளிப் முறையில் சிகிச்சை இவர்கள்க்கு ஒரு நன்மையாக இருக்கும்.
இதய நோய் சிகிச்சையில் 35 ஆண்டைக் கடந்து சேவையாற்றி வரும் அப்பல்லோ மருத்துவமனை, இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு மிட்ரா கிளிப் முறையில் சிகிச்சை அளிக்க உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவில் மிகச் சில மையங்களே இந்த முறையில் சிகிச்சை அளிக்க வல்லுநர்களையும் உயர் தர கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன. அவற்றில் தரமான இதய நோய் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அப்பல்லோ மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தலை சிறந்த இதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ், மிட்ரா கிளிப் முறையில் சிகிச்சை அளிக்க நன்கு பயிற்சி பெற்ற வல்லுநர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான மருத்துவமனைக் குழுமமான அப்பல்லோ, இதய நோய் மருத்துவ சிகிச்சை தொடர்பான நவீன பயிற்சி மையத்தை (டி.ஏ.வி.ஐ.) சென்னையில் அமைத்துள்ளது. இந்த மையத்தை அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி தொடங்கி வைத்தார். டிரான்ஸ்கேதடர் அவோர்டிக் வால்வ் இம்பிளான்டேஷன் (டி.ஏ.வி.ஐ.) எனப்படும் நவீன சிகிச்சை முறையில் சிறந்த வல்லுநர்களை உருவாக்கி அதன் மூலம் இதய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்ற உயரி நோக்கத்தோடு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதய நோய் மருத்துவத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் அப்பல்லோ மருத்துவமனை, உலக இதய தினத்தில் (செப்டம்பர் – 29) இந்த டி.ஏ.வி.ஐ. சிறப்பு பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளது. டிரான்ஸ்கேதடர் அவோர்டிக் வால்வ் இம்பிளான்டேஷன் என்பது முதிய வயதினரிடையே ஏற்படும் பெருநாடி குறுக்கத்திற்கு சிகிச்சை அளிக்கும் புரட்சிகரமான முறை ஆகும். மற்ற காரணங்களால் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த டி.ஏ.வி.ஐ. முறை அவோர்டிக் வால்வு மாற்று சிகிச்சைக்கு சிறந்த நடைமுறை ஆகும். தீவிர பெருநாடி தொடர்பான நோய்த் தாக்கம் 60 வயதுக்கு மேல் ஏற்படுகிறது. அண்மைக்காலமாக இது தொடர்பான நோய்த் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டி.ஏ.வி.ஐ. நடைமுறை அமலில் இருந்த போதும் இன்னும் நாட்டின் பல பகுதிகளுக்கு அது சென்றடைய வேண்டியுள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த இதய நோய் நிபுணர்களும் டி.ஏ.வி.ஐ- முறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களும் இந்த பயிற்சி மையத்துக்கு தலைமையேற்று நடத்துவதால் இது பல நோயாளிகளுக்கு பயன் அளிக்கும்.
டி.ஏ.வி.ஐ. பயிற்சி மையத்தை தொடங்கி வைத்த திருமதி. சுனீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவவமனைக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர், கூறுகையில், “இதய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாளும்போது ஏற்படும் சவால்களை சந்திக்க தற்போது அறிவியல் ரீதியான அணுகுமுறை அவசியமாக உள்ளது. இந்த பயிற்சி மையம், நீண்ட கால இதய நோய்களை நவீன தொழில் நுட்பத்துடன் கண்டறிந்து அவற்றை அணுகும் நுணுக்கங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து, விவாதிப்பதற்கான தளமாக அமையும்.” என்றார்.
“இந்தியாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு நடைமுறையை உலகத் தரத்தில் மாற்றி தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இலக்குகளை எட்ட நாம் அனைவரும் இணைந்து பாடுபட்டு வருகிறோம். உலகின் தலைசிறந்த சிகிச்சை முறைகளை இந்தியாவில் வழங்க வேண்டும் என்பதில் அப்பல்லோ மருத்துவமனை எப்போதுமே முன்னோடியாகத் திகழந்து வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் இதய நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான ஒரு படியாக இந்த மையம் அமையும்.” என்று அவர் மேலும் கூறினார்.
டாக்டர் சாய் சதீஷ் மற்றும் குழுவினர், இலங்கை மற்றும் பஹ்ரைனில் இருந்து வந்துள்ள 2 நோயாளிகளுக்கு மிட்ரா கிளிப் முறையில் இந்த வாரத்தில் சிகிச்சை அளிக்கவுள்ளனர்.