பிளான் இந்தியா மத்திய அரசு நிதிவுதவியுடன் ரியல் நிறுவனம் சார்பாக புதிய டிஜிட்டல் கற்பித்தல் மையம் துவக்க விழா
செங்கல்பட்டு:அக்.4- மத்திய அரசு நிறுவனமான பிளான் இந்தியா நிதியுதவியுடன் ரியல் சமூகசேவை நிறுவனத்தின் சார்பில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியங்கள் உள்ள பகுதிகளில் 15 மையம் அமைத்து 12 வயது முதல் 20வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாடநூல் (சமச்சீர்கல்வி) திட்டத்திற்கு உட்பட்டு மாலை நேரக்கல்வி வழங்கஇ ஒளி ஒலி கானொலி கல்வி இணையதள வழிகற்றல் மற்றும் கற்பித்தல் வழங்கவும் தனித்திறன் மேம்பாடு மனித உரிமை மற்றும் பாலினம் வளர்இளம் பெண்களின் வாழ்க்கைக்கல்வி தொழிற்கல்வி மேம்பாட்டுப்பயிற்சி வழங்கவும் திட்டமிட்டு பிளான் இந்தியா டீ.எஸ்சி- என்ற நவீன தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் ரியல் சமூகசேவை நிறுவனமும் இணைந்து இதன் தொடர் நிகழ்வாக சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பகுதியில் நடைபெற்றது.
தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைகழகத்தின் பதிவாளர் முனைவர் இரா.வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு டிஜிட்டல் கற்றல் கற்பித்தல் மையத்தை துவக்கிவைத்து விழா பேருரை நிகழ்த்தினார். சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள “டிஜிட்டல் கற்றல் தலைமை மையத்தை சென்னை ஊரக வளர்ச்சி திட்ட முகமை கூடுதல் இயக்குநர் சரஸ்வதி கணேசன் மையத்தின் பெயர் பலகையைக் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார். “ரியல்” சுமூகசேவை நிறுவனத்தின் இயக்குநர் திருமிகு.யு.லாரன்ஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முனைவர் வினோத்குமார் மற்றும் ரியல் அமைப்பின் நிர்வாகி லாரன்ஸ் உள்ளீட்டோர் குத்து விளக்கேற்றி டிஜிட்டல் கற்றல் கற்பித்தல் முறைகளை பற்றியும் தரமான கல்வி கற்க அவசியம் குறித்தும் போட்டி உலகத்திற்கு தேவையான அனைத்து திறமைகளையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். என்பது பற்றி பேசி மாணவர்களில் வீழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
பிளான் இந்தியா நிறுவனத்தின் அலுவலர்களால் முதுநிலை மேலாளர் அனித்தாகுமார் ராஜன் வடிவேலு அலேக்குமார் மற்றும் பிளான் இந்தியா கல்வித்திட்ட மேலாளர் யாஸ்மின்ஹாலிம் ஊள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொழில் நுட்ப புதிய டிஜிட்டல் கற்றல் மையம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கமாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மகளிர் குழு நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திறலாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.