தமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்துறையினர் ஒப்படைக்கின்றனர்
செங்கல்பட்டு அரசு சிறுவர் கூர்நோக்கு இல்ல ஊழியர் தாக்கப்பட்டது தொடர்பாக இணை இயக்குனர் தனசேகரபாண்டியன் தொடர் விசாரணை
செங்கல்பட்டு:அக்,4- செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையம் அருகே உள்ள, சிறுவருக்கான அரசினர் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், ஊழியர்க்ள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து, 25 பேரிடம், இணை இயக்குனர் தனசேகரபாண்டியன், ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில், சமூக பாதுகாப்புத் துறை, சார்பில் சிறுவருக்கான அரசினர் சிறப்பு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்துறையினர் ஒப்படைக்கின்றனர். இந்த சிறப்பு இல்லத்ட்தில் தங்கியுள்ள, 60 சிறுவர்களில், 10க்கும் அதிகமானோர், 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆவர். இச்சிறுவர்களை பார்க்க வரும், பெற்றோர்கல் மற்றும் உறவினர்கள், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை கொடுக்கும்போது, பாதுகாப்பு பணியில் இருக்கின்ற ஊழியர்கள் பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி, பணியில் இருந்த ஒரு பாதுகாப்பு ஊழியரை, நான்கு சிறுவர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்ப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை, ஊழியர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சிகாக சேர்த்தனர். இதையடுத்து எழுந்த புகாரால், சமூக பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் தனசேகரபாண்டியன், நேற்று மாலை முதல் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று இரவு வரை, 25 ஊழியர்களிடம், தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், இல்லத்தில் நடைபெறும் சம்பங்கள் குறித்து, தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளனர். தொடந்து இந்த சிறுவருக்கான சிறப்பு இல்லத்தில் தொடர்ந்து சிறுவர்கள் தப்பித்து செல்வதும், இல்ல பாதுகாப்பு காவலர்களை தாக்குவது தொடர்ந்து வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.