பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை

செங்கல்பட்டு:அக்,4- செங்கல்பட்டு அருகே குடும்பத்தகராறு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த செங்குன்றம் மலைமேடு அலமேலு மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் 38 இவரது மனைவி மீனா வயது-36 இவர்களுக்கு திருமனமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ராஜசேகர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மனைவி மீனா சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ராஜசேகர் பணிக்கு சென்ற நிலையில் மீனா தனது வீட்டின் உட்புறம் தாழிட்டு உடல் முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதில் உடல் முழுவது எரிந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்து சம்பவம் அறிந்த மறைமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உனமையிலேயே மீனா மன நிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது வேறு ஏதேனும் காரனமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed