காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி பொதுக்கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு செங்கல்பட்டு வழிகாட்டி சங்கம் மற்றும் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு:அக்,3- செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மாலை செங்கல்பட்டு வழிகாட்டி சங்கம் மற்றும் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாதர் சங்க தலைவர் ராஜலஷ்மி தலைமையில் நடைபெற்றது சங்க செயலாளர் வசந்தா, இயக்குநர் கில்பட் மற்றும் உத்திரமேரூர் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகிம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் பற்றிய விழிப்புனர்வு பாடல்களையும், விழிப்புனர்வு பதாகைகளையும் ஏந்தி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இது குறித்து மாதர் சங்க தலைவர் ராஜலஷ்மி கூறியபோது:- மகாத்மா காந்தியில் பிரந்த நாளான இன்று, உலக அகிம்சை நாளாக ஐ.நா சபை அறிவித்தது, சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேரி வருகிறது. நியாயமற்ற செயல்கள், பாலியல் வன் கொடுமைகள் நடைபெற்றுவருவது மட்டும் வன்முறையல்ல. ஜாதி மதங்களை இழிவு படுத்துவதும் வன்முறைதான். இதற்கு ஜாதி மதம் கடந்து அனைவரும் ஒன்றினைந்து தமிழக வழிகாட்டி இயக்கமும், தமிழக பெண்கள் இயக்கமும் ஒன்றுசேர்ந்து பொட்துமக்களிடம் வன்முறைகள் பற்றிய விழிப்புனர்வு நிகழ்ச்சிகளை செயலாற்றி வருகிறது. என்றார். மேலும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்வம், வசந்தகுமாரி, மேனகா, எல்லம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நிர்மலா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *