வணிகர்கள் நலச்சங்கம் துவக்கவிழா
வணிகர்கள் நலச்சங்கம் துவக்கவிழா
ரத்தினபுரி வணிகர்களுக்கு உதவிடும் பொருட்டு புதிதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து இரத்தினபுரி பகுதி வணிகர்கள் நலச்சங்கம் ஆரம்பிக்க உள்ளனர். இதுகுறித்த இணையும் துவக்க விழா கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பாக்கியநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா துவக்கி வைத்து சிறப்பு-ரை வழங்கினார். விழாவினை சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், இருதயராஜா, ஆர்.எஸ்.கணேசன், வஹாப், சௌந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். எம்.ஆர்.முருகன் பேரவை முருகன், அண்ணா மார்க்கெட் எஸ்.பி.சுரேஷ், ஆர்.கிருஷ்ணன், சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.