நிருபர்களை ஏமாற்றி, அமைச்சர் பணத்தை ஆட்டைய போடும் PRO.
தற்போது அதிமுக ஆட்சியை , முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும், ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்.
இதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, பல இடங்களில் புதியப்புதிய திட்டத்தை நிறைவேற்றியும், துவக்கியும் உள்ளனர்.
பல சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் சேவைகளை, மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய முக்கிய பொறுப்பை ஊடகங்கள் செய்துவருகின்றன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஆன்லைனில் உடனடியாக வரும் செய்திகளை பார்த்து பல துரித நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதன் காரணமாக ஆன்லைன் ஊடகங்களுக்கு, மத்தியில் உள்ளது போல பல சலுகைகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் போனது. பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் மற்றும் ஆன்லைன் ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரும் இழப்பு.
செய்திகளை சேகரிக்கும் நிருபர்களை அதிமுக தலைவர்கள், அன்போடும், கேட்கும் கேள்விகளுக்கு முறையாகவும் பதில் அளித்து வருகிறார்கள்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தலைவர்கள், நிருபர்களை உபசரிப்பது வழக்கம்.
இப்படி, உபசரிக்கும் பெரும் பொறுப்பை தனது PRO க்களிடம் வழங்கியுள்ளார்கள் தலைவர்கள்.
ஆனால், PRO க்கள் நிருபர்களை சரியாக நடத்துகிறார்களா? என்றால் இல்லை.
இந்த PRO க்கள் தொலைக்காட்சிகளில், மாத சம்பளம் வாங்கும் நிருபர்களை உபசரித்தும், ஆன்லைன் மீடியா நிருபர்களை கேவலமாகவும் நடத்துகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
இதுபோன்று வேறுபிரித்து, நிருபர்களை நடத்த வேண்டும் என்று, தலைவர்கள் சொல்வதில்லை.
ஆனால் சில மட்டமான PRO க்கள், நிருபர்களை உபசரிப்பதற்காக தலைவர்கள் வழங்கிய பணத்தில், பல லட்சங்களை ஆட்டைய போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது, தலைவர்களுக்கு தெரியாத அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
இப்படி சில PRO க்களின் முகத்திரையை கிழிக்கத்தான் இந்த பதிவு.
இதை முழு வீடியோவை ஆதாரமாகவே வைத்துள்ளது, அரசுமலர் செய்தி குழு.
இதில் முக்கியமானவர், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் PRO திவாகர் தான்.
சென்னை காந்தி மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பல மணி நேரம் காத்திருந்து, செய்தி சேகரித்த ஆன்லைன் நிருபர்களை PRO திவாகர், மிகவும் மோசமாக நடத்தியது, மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஆன்லைன் நிருபர்களை அன்புடன் அழைத்து உபசரிப்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அவரின் நல்ல செயல்களை, விரிவான செய்திகளாகவும், வீடியோ பதிவுகளை YOUTUBE மூலமாகவும் ஆன்லைன் மீடியா வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவார்.
ஆனால் அமைச்சர் பெயருக்கு, நிருபர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும், இது போன்ற PRO க்களால் பல முக்கிய செய்திகள் முடங்கிப்போய் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை.
இது போன்ற PRO க்கள் மீது, அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட நிருபர்களின் கோரிக்கை.
முக்கிய குறிப்பு :
PRO நிருபர்களை உபசரித்த விதம்.
மாத சம்பளம் வாங்கும் நிருபர்களுக்கு – ரூபாய் 500
அரசு அட்டை உள்ளவர்களுக்கு – ரூபாய் 200
ஆக, பணம் பெற்றவர்கள் 33 பேர் மட்டுமே. இதில் சில போலி நிருபர்களும் அடங்குவர்…