வத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம்
வத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் உதயக்குமார் தலைமை வகித்தார்.சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, வருவாய் கோட்டாட்சியர் தினகரன், கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் பரீசிலிக்கப்பட்டு உரிய தீர்வுக்காக அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டது.முகாமில் 15 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை, 11 நபர்களுக்கு பட்ட மாறுதல் , 16 பள்ளி மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் உட்பட 57 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா பேசும் போது அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி தற்பொழுது மக்களை நாடி அரசு செல்கிறது. பொது மக்கள் இப்படிபட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசுக்கு முமு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசினார். முடிவில் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.