அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,,
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அதிகாரிகள் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில் இராஐபாளையத்தில் பன்றி காய்ச்சலால் ஒரு மூதாட்டி பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட சுகாதார துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணிப்பில் கொண்டு வந்தது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதிலும் 5 நபர்களுக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாகவும் குறிப்பாக
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிக புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த சிவகாசி சுகாதாரதுறை இணை இயக்குனர் பாபுகணேஷ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்தினர். காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவர் காளிராஜ் அவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவர் கூறிய போது மருத்துவமனை பகுதிகள் முழுவதும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வடுகிறது நோயாளி களுக்கு உனடியாக தகுந்த சிகிச்சையளிக்க பட்டு வருகிறது என கூறினார். மேலும் பற்றாக்குறை உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள் நிரப்பபடும் மற்றும் காலியாக உள்ள தலைமை மருத்துவர் பணியிடம் உடனடியாக நிரப்பபடும் மற்றும் புதிய இரத்த சுத்தகரிப்பு மையம் விரைவில் அமைக்க படும் என்று சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா தெரிவித்தார். அனைத்து வார்டுகளுக்கும் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டவர்களிடம் ஆறுதல் கூறி குறை, நிறைகளை கேட்டறிந்து பொது மக்களுடன் இனைந்து நிலவேம்பு கசாயம் அருந்தி அனைவருக்கும் வழங்கினார்.மக்கள் பயன்படுத்தும் பொது இடங்கள் அரசு கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பதாகைகளை வைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது என சுகாதாரதுறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா