முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நல திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்க்கு ஊர் மக்கள் சிறந்த வரவேற்ப்பு கொடுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசு உதவி பெறும் பசும்பொன் தேவர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம்,வெள்ளி நாணயம் மற்றும் பரிசுகள்நல திட்ட உதவிகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா அவர்களின் தொகுதி சேவையை பாராட்டி மம்சாபுரம் பகுதி கிராம மக்கள் மேல தாளம் முழங்கியும், மாணவ மாணவிகள் கிராமிய நடனங்கள் ஆடியும், வீரர்கள் சிலம்பங்கள் விளையாடியும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதில் முன்னால் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகர கழக பொருளார் பாலசுப்பிரமணியம், கழக நிர்வாகிகள் தங்கமுத்து, அய்யனார், மணி, கணேசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *