புதிய துணை மின் நிலையத்தை சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய துணை மின் நிலையத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராப் பேரூராட்சி பகுதியில் உள்ள 25 கிராமங்களில் குறைவான மின் அழுத்த மின்சாரம் கொடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாடு, விவசாய பணிகள்,தொழிற்சாலை போன்றவைகள் பாதிப்படைவதாக கோரிக்கை எழுந்த நிலையில் அனைவரும் பயன்பெறும் வகையில் உடனடியாக சட்ட மன்ற உறுப்பினர் முயற்ச்சியால்

அனைத்து கிராம பகுதிகளுக்கும் 220 மெகா வாட் மின்சாரம் சீரான முறையில் கிடைத்திட துலுக்கப் பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிய துணை மின் நிலையம் 3.87 கோடி செலவில் அமைக்கப்பட்டது. துணை மின் நிலையத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இன்று முதல் 25 கிராம பகுதிகளுக்கும் சீராண மின்சாரம் கொடுக்கப்படும் என மின் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *