பட்டாசு வெடிக்கும் போது விபரீதம்
பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை
சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மேடவாக்கம் அருகே உள்ள நூக்கம்பாளையம், எழில் நகரில் உள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் சந்தீப்குமார் என்ற இளைஞருக்கும், நண்பர்களுக்கும் இடையே பட்டாசு வெடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் ஏற்பட்ட இந்த தகராறில், அதே பகுதியை சேர்ந்த நண்பரை சந்தீப்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து சந்தீப்குமாரை சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார், சந்தீப்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.