காய்கறி பராமரிக்க மத்திய அரசு புதிய திட்டம்
காய்கறிகளைப் பராமரிக்கவும் விநியோகிக்கவும் மத்திய அரசு புதிய திட்டம்
காய்கறி விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், 500 கோடி ரூபாய் செலவில் காய்கறி பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீயின் பட்ஜெட் உரையில் இத்திட்டம் இடம் பெற்ற போதும் பல மாதங்கள் கழித்தே அமல்படுத்தப்படுகிறது. பசுமை ஆபரேசன் என்ற பெயரில் இத்திட்டம் அழைக்கப்படுகிறது.
அண்மையில் உருளைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மூட்டை மூட்டையாக உருளைக் கிழங்குகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இது போன்ற பிரச்சினைகளால் காய்கறிகளைப் பதனிட்டு பராமரிப்பதற்கு இத்திட்டம் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
எளிதில் அழுகக் கூடிய காய்கறிகளை சில நாட்களுக்கு பராமரித்து வைத்திருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் காய்கறி பராமரிப்பு கூடங்கள் அமைக்கப்படும். மேலும் காய்கறிகளை விரைவாக நாட்டின் இதர பகுதிகளுக்குக் கொண்டு செல்ல ரயில்,பேருந்து போன்ற போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.