பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிறிஸ்துமஸ் திருவிழா
ரமதா பிளாசா கிண்டி கொண்டாடும் கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவை திருவிழா
பி.ஆர்.கிராண்டின், ரமதா பிளாசா கிண்டியின் பண்டிகைகால வாழ்த்துக்கள்!
பண்டிகை காலம் நெருங்கும் தருவாயில்,
பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி பண்டிகை கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக தயாராகி வருகிறது.
பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி, சென்னை விமான நிலையம் அருகில் அமையப் பெற்ற 5 நட்சத்திர ஹோட்டல். அதன் உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் சேவைகளுடன், வணிக மற்றும் ஓய்வு பயணிகளை உபசரிக்கும் வகையில் அதன் முதல் ஆண்டு வெற்றிகரமாக முடிந்தது. அற்புதமான உபசரிப்பு, ஆடம்பரமான அலங்கரிகபட்ட உட்புற கட்டமைப்பு, சிறந்த பான்-ஆசிய உணவகம் – தி ஸ்காலியன் மற்றும் உலகதரம் வாய்ந்த கஃபெ – தி காபி பிளேஸ், புத்துணர்ச்சியூட்டும் பிரீமியம் பானங்கள் மற்றும் அற்புதமான உணவு அனுபவத்தை வழங்க சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த உணவை வழங்கும் ரெஸ்டோபார் – எக்ஸ்டேஸ். இது போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டதனால் ரமதா பிளாசா சென்னை கிண்டி எல்லாவிதமான கொண்டாட்டங்களுக்கும் நகரில் முக்கிய இடமாக அமையபெற்றுள்ளது. அதன் தொடக்கமே இந்த கேக் கலவைதிருவிழா. இந்த விழாவிற்கு டிவி தொகுப்பாளர் டி.டி என்று பிரபலமாக அறியப்படும் திவ்யதர்ஷினி கௌரவ விருந்தினராக வந்து சிறப்பித்தார்.
கேக் கலவைதிருவிழாவில் இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியில், ரமதா பிளாசா கிண்டியின் பொதுமேலாளர், திரு சந்தீப் பட்நாகர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். இந்த திருவிழா நவம்பர் 10, 2018, அன்று தொழில் வல்லுநர்கள் மற்றும் காபி பிளேஸின் முக்கிய சமையல் பிரமூகர்களால் நினைவு கூரப்பட்டது. நகரத்தைச் சேர்ந்த சமூகவாதிகள் மற்றும் சென்னை நகரின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் இது கொண்டாடப்பட்டது. சந்தீப், வரவிருக்கும் மாதங்களின் உணவு திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தி, இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் தனது வாடிக்கையாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கேக் கலவைதிருவிழா 17ஆம் நூற்றாண்டில் உருவானதாக நம்பப்படுகிறது. அறுவடை பருவத்தின் வருகையைக் குறிக்கும் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் பழங்கள் மற்றும் உலர்ந்தகனிகள் அறுவடை செய்யப்பட்டு பாரம்பரிய கிறிஸ்துமஸ் பிளம் கேக் தயாரிக்கபடுகிறது. கலவையின் ஒரு பகுதி அடுத்த அறுவடை பருவத்திற்காக சேமித்துவைக்கப்படுகிறது. இக்கலவை, ஏராளமான அறுவடைகளையும் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.
கேக் கலவை கேக் பேக்கிங்விட வித்தியாசமானது. இது ஒரு வகை உறிஞ்சும் செயல் முறை ஆகும். பேக்கிங் தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கலவைகள், சாறுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் கலந்து வைக்கப்படும்.
விழாவில் பங்கு பெற்ற திவ்யதர்ஷினி மற்றும் விருந்தினர்களுக்கு செஃப் தொப்பிகள், எப்பிரன்ஸ் மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அவர்கள் ஒன்றாக இணைந்து அனைத்து பொருட்களையும் கலப்பதை ரசித்தார்கள். ரமதா பிளாசா சென்னை கேக் பழக்கலவை விழாவை கண்கவரும் விதத்தில் கொண்டாடினார்கள்.
இது கிறிஸ்துமஸ் பருவத்தின் மகிழ்ச்சியான விழாக்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமைகிறது.