ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்ராப் அருகே பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா வழங்கினார் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்ராப் அருகே பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா வழங்கினார் .

வத்ராப் அருகே உள்ள கான்சாபுரத்தில் ஏழை பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா கலந்து கொண்டு 35 பயனாளிகளுக்கு வழங்கி பேசும் போது புரட்சிதலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டமான ஏழை பயனாளிகளுக்கு விலையில்லா கால்நடை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து தற்போது எடப்பாடியாரின் ஆட்சியில் இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போழுது இன்று வழங்கியது போல் மேலும் பல கிராமங்களில் நடைபெற உள்ளது. பயனாளிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அரசின் திட்டங்களுக்கு பொது மக்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.விழாவில் கால்நடை மருத்துவர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மற்றும் சேதுராமன்,கருமாரிமுருகன்,தங்கமுத்து,ராஜா, மணி, கணேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed