51 – வது தேசிய நூலக வார விழா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை 51 – வது தேசிய நூலக வார விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா அரங்கத்தில் வைத்து தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இனணந்து நடத்தும் 51-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 12 மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின் மாநில அளவில் சிறந்த நல்நூலகர் விருது பெற்ற மம்சாபுரம் பேரூராட்சியை சேர்ந்த பழனிக்குமார் அவர்களை சிறப்பித்து வாழ்த்தி தமிழ்நாடு அரசினால் கொடுக்கப்பட்ட சான்றிதழ், பதக்கங்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், நகர் கழக பெருளாளர் கருமாரி முருகன், தைலாகுலம் மணி, கணேஷ், டி.வி.கே கந்தசாமி, தங்கமுத்து, வழக்கறிஞர் ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா