சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுள்ள பெண்களும் செல்லாம்
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது காவல்துறையினரை கொண்டு தாக்குதல் நடத்தும் கேரள அரசை கண்டித்து சேலத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…..
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுள்ள பெண்களும் செல்லாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சபரிமலைக்கு பெண்கள் தற்போது செல்ல முற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவல்துறையை ஏவி ஐயப்ப பக்தர்களை கைது செய்யும் கேரள அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தவகையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது காவல்துறையினரை கொண்டு தாக்குதல் நடத்தும் கேரள அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக பொதுச்செயலாளர் சரஸ்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் ஐயப்ப பக்தர்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.