அரசு நடுநிலைப் பள்ளி உயர் நிலைப்பள்ளியாக மாற்றிய திருமதி.சந்திர பிரபா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியை உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தி குத்துவிளக்கு ஏற்றி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா துவக்கி வைத்தார்…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராப் ஒன்றியம் கீழக் கோட்டையூர் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்று முடித்து விட்டு மேல் படிப்பை தொடர்வதற்கு கிழக்கோட்டையூரில் இருந்து சுமார் 8. கி.மீ தொலைவிற்கு சென்று மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதற்கு சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா விடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்ததை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசுகளை வழங்கினார்.