எஸ்‌.ஆர்.எம் இயன்முறை மருத்துவ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் இயான்-2018

எஸ்‌.ஆர்.எம் இயன்முறை மருத்துவ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் இயான்-2018

இயான் -2018 என்ற பெயரில் எஸ்.ஆர்.எம் இயன்முறை மருத்துவ கல்லூரி சார்பில் சர்வதேச கருத்தரங்கம் டிசம்பர் 13 & 14 இல் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம் இயன்முறை மருத்துவ கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டு என்பதால் இந்த இரு நாள் சர்வதேச கருத்தரங்கம் “இயன்முறை மருத்துவத் துறையில் உள்ள நவீன முன்னேற்றங்கள்” குறித்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல மருத்துவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கினர். இவ்விழாவினை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் டாக்டர் இர. பாலசுப்பிரமணியன் அவர்கள் துவக்கிவைத்தார். உடன் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் நா.சேதுராமன் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுர மாவட்ட டிஐஜி பி.சி. தேன்மொழி இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புலத் தலைவர் முனைவர் மலர்விழி அவர்கள் வரவேற்றார்.
இந்த கருத்தரங்கில் லண்டன், கத்தார், அமெரிக்கா மற்றும் தமிழகத்தில் உள்ள பிரபல இயன்முறை மருத்துவ துறையை சார்ந்த 650க்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *