என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்
என்எல்சி மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி மக்கள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வந்த என் எல் சி எதிர்ப்பு போராட்டக் குழு என்எல்.சி தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்பதினை வலியுருத்தியும் அதனை செயல்படுத்த நினைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் வள்ளுவர் கோட்டத்தில் அருகில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
தமிழ்நாட்டிற்கு மின்சாரமும்,வேலை வாய்ப்பும்கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்கள் நிலங்களை கொடுத்ததாகவும்.
இப்போது என்எல்சி நிறுவனம் அதன் நோக்கத்தை மறந்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக மக்களை சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது
ஏற்கனவே மூன்று சுரங்கங்களை என்எல்சி நிறுவனம் நிலக்கரிக்காக எடுக்கப்பட்டுள்ளது என்றும் நான்காவது சுரங்கத்திற்கு இவர்கள் மக்களை சுரண்டுகின்றனர் என்றுகுற்றம்சாட்டுகின்றனர்.
அது மட்டுமன்றி ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் 10000 ஏக்கருக்கும் கூடுதலாக நிலங்கள் பயன்படுத்தாமலே இன்னும் நிலுவையில் உள்ளது என்றும்
இதுவரை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தி உள்ள நிலங்களின் பரப்பளவு 12 125 ஏக்கர் ஆகும்.
இந்நிலங்கள்அப்பகுதியில் உள்ள 26 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது என்றும் கூறுகின்றனர்.
இந்நிலங்களில் இருந்து ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும்
நெய்வேலி பகுதியில் உள்ள 26 கிராம பஞ்சாயத்து மக்களின் வாழ்வாதாரங்களை இழக்க முடியாது என்றும் மாறாக நெய்வேலியில் மூன்றாம் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை என்எல்சி நிறுவனமும் தமிழக ஆட்சியாளர்களும் உடனே கைவிட வேண்டுமென்று நெய்வேலி மக்கள் கோரிக்கைளை வலியுகுத்தி மத்திய மாநில் அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்….