தள்ளுபடியை அள்ளி வழங்கும் விமான நிறுவனங்கள்
தள்ளுபடியை அள்ளி வழங்கும் விமான நிறுவனங்கள்
புதுடெல்லி: புத்தாண்டையொட்டி பயண சலுகையாக உள்நாட்டு விமான நிறுவனங்கள் மட்டுமின்றி சர்வதேச விமான நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. ஒரு வழி பயண டிக்கெட், சென்று திரும்புவதற்கான ரிட்டர்ன் டிக்கெட் எடுப்போருக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் 50 சதவீதம் வரை கட்டண தள்ளுபடி அறிவித்துள்ளன. விமான நிறுவனங்களுக்கு ஏற்ப, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை கட்டண சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சலுகைகள் எல்லா வழித்தடங்களுக்கும் பொருந்தாது. சில நகரங்களுக்கு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.