பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை, ஜன.1:

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் மகளிர் திட்டத்தின் மூலம் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை எஸ்.பி.வேலுமணி 183 உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை வழங்கினார்.

மாநிலம் முழுவதும் முதலமைச்சர் உத்தரவின்படி அம்மா இருசக்கரவாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 50 சதவிகித மானியம் அல்லது 25,000- ரூபாயில் எது குறைவோ அத்தொகை இத்திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த வாகனங்கள் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறைகளில் சுயதொழில் செய்யும் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள, ஆண்டுக்கு ரூ.2.50 இலட்சத்துக்குள் வருமானம் ஈட்டக் கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதியில் வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர் மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2017-&18ம் ஆண்டிற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22,965 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஊரக பகுதியில் 6003 விண்ணப்பங்களும் நகர்புற பகுதியிலிருந்து 16,962 விண்ணப்பங்களும் பகுதி வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படிஐஐ கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்கள் தொகை சதவிகித அடிப்படையில் நகர்ப்புற பகுதியில் உள்ள 3746 உழைக்கும் மகளிருக்கும் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள 1203 மகளிருக்கும் என மொத்தம் 4949 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டதில் 99,530 மகளிருக்கு வாகனம் வழங்குவதற்குரிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 58,635 மகளிருக்கு இதுவரை மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2017&-18 ஆம் ஆண்டில் 4,949 உழைக்கும் மகளிருக்கு 50 சதவிகித மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 853 மகளிர்களுக்கு 1.77 கோடி மதிப்பில் மனிய விலையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே அனைத்து துறைகளிலும் வரலாறு காணாத வளர்ச்சிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சாலைகள், மேம்பாலங்கள், தடையில்லா குடிநீர் என இனிவரும் நாட்களை எதிர்நோக்கி திட்டங்கள் தீட்டப்படுவதால், நீண்டகாலங்களுக்கு மக்கள் பயன் பெறலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன். கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, ஆவின் கூட்டுறவுத் தலைவர் கே.பி.ராஜூ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *