குளத்தில் ஆளம் அதிகமாக உள்ள பகுதியில் சென்றுவிட்டதால் கரையேற முடியாமல் தவித்து தண்ணீரில் மூழ்கினர்
திண்டுக்கல் மலைக்கோட்டை குளத்தில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் இருவர் பலி திண்டுக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் அடிவாரத்தில் குளமும் உள்ளது சௌராஷ்ட்ரா பள்ளியைச் சேர்ந்த சக்தி, பிரபு என்ற இரண்டு மாணவர்கள் குளிப்பதற்காக கோட்டை குளம் வந்துள்ளனர் அப்போது ஆளம் அதிகமாக உள்ள பகுதியில் சென்றுவிட்டதால் கரையேற முடியாமல் தவித்து தண்ணீரில் மூழ்கினர் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் நகர் தெற்கு காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.