பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கதர் கிராம தொழில்கள் ஆணையம் மும்பை இந்திய அளவில் செயல்படுத்துகிறது
மாநில அளவிலான பொருட்காட்சி
கோவை பிப்ரவரி
மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கதர் கிராம தொழில்கள் ஆணையம் மும்பை இந்திய அளவில் செயல்படுத்துகிறது இந்த திட்டம் மாநில அளவில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் மாவட்ட தொழில் மையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது இத்திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகள் மூலம் கடன் பெற்று நிறுவப்பட்டுள்ளன இத்திட்டத்தின்கீழ் உற்பத்திப் பிரிவு அதிகபட்ச அளவு ரூபாய் 25 லட்சம் சேவை பிரிவிற்கு 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மானியத் தொகையாக 15% முதல் 30 35 சதவீதம் வரை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அளவிலான கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
கண்காட்சியினை இந்திய கயிறு வாரிய தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சென்னை KVIC ஸ்டேட் டைரக்டர் கே.எஸ்.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கோவை கனரா வங்கியின் பொது மேலாளர் கணேசன், கோவை DIC பொது மேலாளர் கண்ணன், கோவை கனரா வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கட்ரமணன், கோவை நபார்டு வங்கியின் ஜெனரல் மேலாளர் வசீகரன், கோவை TNKVIB சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கண்காட்சியானது பிப்ரவரி 1_ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கோவை அவினாசி ரோட்டில் உள்ள மீனாட்சி மகாலில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலமாக பயன்பட்ட உற்பத்தியாளர்களின் பொருட்களை சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது. இந்த பொருட்காட்சியில் தமிழ்நாடு, கர்நாடகா , ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், கேரளா உட்பட பிற மாநிலங்களிலிருந்தும் பலதரப்பட்ட உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு தங்களுடைய பொருட்களை விற்பனைக்கு காட்சி படுத்தி உள்ளார்கள். இதில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் தோல் பொருட்கள், காலணிகள், பித்தளை பொருட்கள், சணல், மூலிகை காகிதம், மண்பாண்ட பொருட்கள், எம்பிராய்டரி புடவைகள், மற்றும் ரெடிமேட் ஆடைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சர்வோதயா சங்கங்கள் தயார் செய்த கதர் ரகங்களுக்கு 30% வரை சிறப்புத் தள்ளுபடி உண்டு.
முடிவில் காந்திபுரம் காந்திபுரம் சர்வோதய சங்கத்தின் செயலாளர் ஜெயகாந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.