தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ். அழகிரி அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி அவர்களுக்கும், அதேபோல் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெச். வசந்த குமார் எம்.எல்.ஏ, கே. ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்த கே.எஸ்.அழகிரி அவர்கள், மதவாத சக்திகளின் திட்டங்களை முறியடித்து, தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் மென்மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியை வழிநடத்திச் செல்ல எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.