ஐஸ்வர்யா டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா

குனியமுத்தூரில் 12 ஆயிரம் சதுரடியில் ஐஸ்வர்யா டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா

கோவையில் ஐஸ்வர்யா டைல்ஸ் என்ற புதிய டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி, கோவை குனியமுத்தூர், அபர்ணா பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜெ.பி.சண்முகம் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். சமூக ஆர்வலர் இ.ஏ.பி.அன்பரசன், நேரு கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், மணி டிரேடர்ஸ் மணி, குப்புராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக சத்யநாராயணன் கலந்து கொண்டு, புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையினை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவகணேஷ் துவக்கி வைத்தார். அதனை செந்தில் குழுமத்தின் ஓ.ஆறுமுகசாமி பெற்றுக் கொண்டார்.

இது குறித்து ஜெபி.சண்முகம் கூறியதாவது : தரமான டைல்ஸ் கிடைக்கும் வகையில், இந்த ஐஸ்வர்யா டைல்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் சதுரடி பரப்பளவில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோருமில் டைல்ஸ், சானிடரிவேர்ஸ், லேமினேட்ஸ், பிளைவுட்ஸ், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளது. இங்கு அனைத்து வகையான டைல்ஸ் பிராண்டுகளும் கிடைக்கும். மேலும் புதிய வீடு மற்றும் வீடு புதுப்பித்தலுக்கு தேவையான அனைத்து கட்டிடப் பொருட்களும் உள்ளது.

இங்கு விற்பனைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களும் குஜராத்தில் தயாரிக்கப்பட்டவை. இதனை நேரடியாக கொள்முதல் செய்து, குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்ய உள்ளோம். அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் நேரடியாக பொருட்களை பார்த்து வாங்கி கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்குஏற்ப போன் மூலம் தொடர்பு கொண்டாலே போதும், தேவையான பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில், ஜெ.ஆர்.டி.ராஜேந்திரன், ஆவின் சேர்மன் கே.பி.ராஜூ, குனியமுத்தூர் கே.பி.செல்வராஜ், விஸ்வநாதன், முத்துசாமி, பிஎம் அன்ட் கோ கிருஷ்ணசாமி, ஆஸ்ரம் பள்ளி தேவேந்திரன், டென்னிஸ் பீட்டர், ஹாட் சிப்ஸ் உமர், எஸ்.எஸ்.மணியன், கே.பி.ராமமூர்த்தி, மதுக்கரை சண்முகராஜா, அமிர்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *