வி.ஜி.எம். மருத்துவமனையில் உலக புற்றுநோய் தின விழா
கோவை சிங்காநல்லூர் வி.ஜி.எம். மருத்துவமனையில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை. பிப்ரவரி.4_ கோவை சிங்காநல்லூரில் உள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரசாத் கலந்து கொண்டு பேசும் போது நமது உணவு பழக்க வழக்க முறைகளில் பல மாறுபாடுகளை ஏற்பட வைக்கிறது. எனவே ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமாகும். எடை குறைதல், பசியின்மை, வயிற்றுவலி, ரத்த வாந்தி, வாந்தி, ரத்த போக்கு ஆகியவை புற்று நோயின் அறிகுறியாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதில் டாக்டர்கள் மதுரா, கோகிலா, செல்வராஜ், சுமன், கோகுல், அகிலா, மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.