ம.பொ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவினை ’ இலக்கியத்தில் உளவியல் மரபுகள்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 4, அன்று ம.பொ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவினை ’ இலக்கியத்தில் உளவியல் மரபுகள்’ எனும் பொருண்மையில் சென்னை, செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. முனைவர் விமலா அண்ணாதுரை அவர்கள் நிகழ்த்தினார். பெட்ரிசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா. சத்தியப்பிரியா அவர்கள் முன்னிலை வகித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் இந்நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார். பேரா. முனைவர் செல்வகுமார், திருமதி, சுகன்யா, திருமதி ஜகதா, சந்தனமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *