சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
முதல்வர் துவக்கி வைத்தார்
கோவை, பிப்.6&
கோயம்புத்தூர் மாவட்டம், முதலிப்பாளையத்தில், பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் பேசிய முதல்வர் : பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாறிவரும் தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்குவதிலும் மாண்புமிகு அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து நிதி நிலை அறிக்கையில் அதிகமான நிதி ஒதுக்கி வருகிறது. இன்றைக்கு அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில் அரசு மருத்துவமனைகளோடுஇ தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக சேவையாற்றி வருகிறது. இன்றைக்கு வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்குத் தான் வருகிறார்கள்.
தென் இந்தியாவின் தொழில் நகரம் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகர் பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியது. தொழிலாளர்களும், வணிகர்களும் நிறைந்த நகரம் இது. ஆகவேஇ இந்த மாவட்டமும் அருகிலே இருக்கின்ற திருப்பூர் மாவட்டம்இ இரண்டு மாவட்டங்களுமே இன்றைக்கு தொழில் வளம் மிகுந்த மாவட்டம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகின்றேன். இம்மருத்துவமனை இன்றைக்கு பல்வேறு சிறப்புகள் அடங்கிய மருத்துவமனையாக இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விழைகின்றேன். 1 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடியில் இந்த மருத்துவமனை கட்ட இருப்பதாவும், 110 அறைகள் கொண்ட மருத்துவமனையாக இருக்கும் என்றும் இங்கே நான் பேசுகின்றபொழுது, என்னிடத்திலே சொல்லி இருக்கின்றார்கள். பல்நோக்கு மருத்துவமனையாக இந்த மருத்துவமனை அமைகின்றது. இந்த மருத்துவமனை அமைகின்றபொழுதுஇ இந்த சுற்றுப் பகுதியில் இருக்கின்ற அத்தனை பேரும் சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலைஇ இந்த மருத்துவமனையால் ஏற்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட கிராமங்களில் மருத்துவமனை அமைகின்றபொழுது சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமத்தில் இருக்கின்ற ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லாம் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலையை பேரூர் ஆதினம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளை இன்றைக்கு நிறைவேற்றி இருப்பது போற்றுதலுக்குரிய ஒரு செயலாகும்.அதற்கு பக்கபலமாக இந்த மருத்துவமனை வளரும் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி இந்த அறக்கட்டளையால் செயல்படுத்தப்படு இந்த மருத்துவமனை இந்த மருத்துவமனை இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மருத்துவமனையாக அமைந்திருப்பதற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழால் சட்டப்பேரவைத் தலைவர் கே.தனபால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவையின் துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சாந்தலிங்க மருதாசல அடிகளார், இராமனந்த குமரகுருபர அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர்சி.மகேந்திரன், ஏ.கே.செல்வராஜ்
சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கனகராஜ், எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, ஆறுக்குட்டி, குணசேகரன், விஜயகுமார்உட்பட பலர் கலந்து கொண்டனர்.