தமிழ் மருத்துவ மூலிகைகளின் பயன்பாடும் விற்பனை வாய்ப்புகளும்

தமிழ் மருத்துவ மூலிகைகளின் பயன்பாடும் விற்பனை வாய்ப்புகளும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் தாய் 71- தமிழாய்வுப் பெருவிழா நிகழ்ச்சியின் தொடர்வாக 09 – 02 – 2019 சனிக்கிழமை அன்று முற்பகல் நிகழ்வாக தமிழ் (இயற்கை ) மருத்துவ இருக்கை சார்பாக சிறப்பு சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. இவ்விழாவினை நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இருக்கையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மரு க. ஆ. இரவி அவர்கள் தமிழ் மருத்துவ மூலிகைகளின் பயன்பாடும் விற்பனை வாய்ப்புகளும் என்ற பொருண்மையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். நிறுவன நூலகர் முனைவர் பி. கவிதா அவர்கள் வரவேற்புரையும், நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கா. காமராஜ் அவர்கள் வாழ்த்துரையும், ஆய்வியியல் நிறைஞர் மாணவி ச. மாலதி அவர்கள் நன்றியுரையும், கவிஞர் செம்மொழி மு.குமார் அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையும் வழங்கினார்கள். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் காட்சிக் கூடப் பொறுப்பளர் முனைவர் து. ஜானகி, முனைவர் கோ. பன்னீர்செல்வம், மருத்துவர் இரா. பாலகுமார் மற்றும் நிறுவன முதுகலை ஆய்வியியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பல்வேறுத்துறைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *