ரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.

திருச்சியில் வங்கியில் ரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.

திருச்சி:திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற துணிகர கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
Nearly rs. 5 crore, jewels, looted by unknown persons in punjab national bank,tiruchirapalli
வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின்னர்… வங்கியினுள் நுழைந்த மர்ம நபர்கள் 5 லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை நிகழ்ந்த இடத்தில் கேஸ் வெல்டிங் எந்திரம், சுத்தி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளை போயிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால்.. வங்கியின் மெயின் லாக்கர் உடைக்கப்படவில்லை, தனிநபர்களின் லாக்கர்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி சரக டிஐஜி வரதராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *