அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் 1000 பேருக்கு நலதிட்ட உதவி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 71வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் சார்பாக அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் 1000 பேருக்கு நலதிட்ட உதவிகள், மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழா அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற் சங்க பேரவை உறுப்பினர் சங்கரதாஸ் ,பேரவை பொருளாளர் அப்துல் அமீது , பேரவை, போக்குவரத்து பிரிவு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், இரா. அன்பு தொடங்கி வைத்தனர்.
இவர்களுடன் மண்டலத் தலைவர் ஜி.சம்பத் குமார், மண்டலப் பொருளாளர் பி.நாராயணசாமி, மண்டல இணைச் செயலாளர் ஆர்.ஏ. கார்த்திகேயன், மற்றும், மத்திய சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.