போலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா : எஸ்.பி., துவக்கி வைப்பு
போலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா : எஸ்.பி., துவக்கி வைப்பு
போலீஸ் வாகனத்தில் சி.சி.டி.வி., கேமரா செயல்பாட்டை எஸ்.பி., சரவணன் நேற்று துவக்கிவைத்தார்.மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. கடலுார் எம்.பி., அருண்மொழித்தேவன் தொகுதி நிதியிலிருந்து கேமரா பொருத்த 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.இதில் மாவட்டத்தில் 90 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது. இந்நிதியிலிருந்து போலீஸ் அதிகாரிகள் ஜீப்பில் மொபைல் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, முக்கிய பாதுகாப்பு பணியிலும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களில், குற்றம் நடைபெறும் இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்ட ஜீப்புகள் நிறுத்தப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.இந்த கேமரா 500 மீட்டர் துாரத்தில் உள்ள சம்பவங்களை படம் பிடிக்கும் வகையி்ல் அமைக்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் படங்கள், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் மொபைல் போனில் பதிவாகும் வசதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, போலீஸ் ஜீப்பில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, இதனை எஸ்.பி., சரவணன் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறுகையில், கேமரா பொருத்தப்பட்டதிலிருந்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் புகார் பெருவது மற்ற மாவட்டங்களை விட கடலுார் மாவட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில் விபத்து ஏற்படும் என 71 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் ஒளிரும் எச்சரிக்கை பலகை , உச்சிமேடு, காராமணிக்குப்பம், பண்ருட்டி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.