திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் கீதா என்பவர் உயிரிழப்பு .
நான்கு வயது மகன், மூன்று வயது மகள் ஆகியோரை தவிக்கவிட்டு திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் கீதா என்பவர் உயிரிழப்பு .
உயிரிழந்தவர் யார் என்று தெரியாத நிலையில் இரண்டு குழந்தைகளுடன் உறவினர்களுக்காக காத்திருக்கும் போலீசார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தக்கூடிய பிரதான கல்யாண கட்ட முன்பு கடந்த 1ம் தேதி சுய நினைவு இல்லாமல் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் இருப்பதை அப்பகுதியில் இருந்த பக்தர்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தான சுவிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்தப் பெண் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் பெயர் கீதா என்பதும் அவருடன் இருந்தவர்கள் 4 வயது மனோஜ் என்ற மகனும் 3 வயது கீர்த்தனா என்ற மகளும் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் எங்கிருந்து யார் மூலம் அழைத்து வரப்பட்டார்கள். என்று தெரியாத நிலையில் போலீசாரிடம் இந்த இரண்டு சிறுவர்களும் உள்ளனர். தாயை இழந்த நிலையில் யாரும் இல்லாமல் நிர்கதியாக காவல் நிலையத்தில் போலீசாரின் அரவணைப்பில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கீதா உயிரிழந்த நிலையில் அவருடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவின் உறவினர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தில் உள்ள சிறுவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் திருமலை இரண்டாவது நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்போன் எண் 9440796769 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.