ராயல் கேர் மருத்துவமனை அறிமுகம் செய்தது சிறப்பு ஆம்புலன்ஸ்
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக உடனுக்குடன் தகவல் பரிமாற்ற வசதியுடன் கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் ராயல் கேர் மருத்துவமனை அறிமுகம் செய்தது
கோவை,மார்ச் 16:
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யும் பொழுது உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை இடமாற்றம் செய்யும் பொழுது சில சிரமங்கள் ஏற்படலாம். குறிப்பாக நோயாளியுடன் பயணிக்கும் செவிலியர்களுக்கு நோயாளியின் உடல் நிலையில் ஏற்படும் திடீர் நிகழ்வுகளை கண்டறிவதும் சமாளிப்பதும் கடினமாக இருக்கும். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் உடல் நிலையை மருத்துவமனையிலிருந்து கண்காணிப்பதிலும் சிகிச்சை முறைகளை வழிநடத்துவதிலும் சிரமங்கள் இருக்கும் இருக்கலாம். எனவே இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஆம்புலன்சில் பயணிக்கும் நோயாளிகளை பற்றிய மருத்துவ குறிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் அதி நவீன தகவல் பரிமாற்ற கழிவுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ராயல் கேர் மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் மாதேஸ்வரன் கூறும்பொழுது; இந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, ஈசிஜி குறித்த தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸ் புறப்படுவதிலிருந்தே பரிமாற்றம் செய்யப்படும். மருத்துவமனையின் பிரத்தியேக மருத்துவ குழுவானது தகவல்களின் அடிப்படையில் ஆம்புலன்சில் நோயாளியுடன் பயணிக்கும் மருத்துவர் மற்றும் செவிலியருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள். அதே சமயத்தில் நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் எம்.எமன். சிவகுமார் கூறும்பொழுது; அதிநவீன ஆம்புலன்ஸ் மூலம் தகவல் பரிமாற்றம் மேம்பட்டு மருத்துவமனையிலிருந்து கூடுதல் கண்காணிப்பு அறிவுறுத்தலும் கிடைப்பதால் நோயாளிகளிடம் பரிமாற்றம் பாதுகாப்பான முறையில் நடைபெறுவது சாத்தியமாகிறது. இதனால் சரியான சிகிச்சை முறைகளும் உடனடியாக கிடைக்கப்பெற்று உயிர் சேதம் தவிர்க்கப்படுகிறது என கூறினார்.
ஆம்புலன்ஸை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜாயிண்ட் டிரான்ஸ்போர்ட் கமிஷனர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தெற்கு ஆர்.டி.ஓ.பால்ராஜ் கலந்து கொண்டனர். முடிவில் ராயல்கேர் மருத்துவமனை மெடிக்கல் டைரக்டர் பரந்தாமன் சேதுபதி நன்றி கூறினார்.
24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 91434 91434, 0422 2227444 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.