வேட்பாளர் பி.ஆர்..நடராஜன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார்.
கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்..நடராஜன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார்.
கோவை. மார்ச்.17-
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக் கூட்டணியில் கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அக் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்திற்கு வந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.தேவராஜ், சி.சிவசாமி, மாவட்டப் பொருளாளர் உ.கே.சுப்பரமணியம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல், மு.வ.கல்யாணசுந்தரம், ஜி.நாராயணசாமி, மத்திய மண்டல செயலாளர் ரவீந்திரன், அலுவலக செயலாளர் கே.வெங்கடாசலம், ஏ.பி.மணிபாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்பாளருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெ.ராமமூர்த்தி, சி.பத்மநாபன், உ.கே.சிவஞானம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உ.கே.வெள்ளியங்கிரி, கே.சி.கருணாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
(கோவை நிருபர் ராஜ்குமார்)