காலி குடங்களுடன் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிகுட்பட்ட 1வது வார்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

துறையூர் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் உள்ள பொதுமக்கள் ஆத்தூர் சாலையில் காலி குடங்களுடன் நின்று தீடிர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் குடிநீர்யின்றி மக்கள் பெரும் அவதிகுள்ளாகினர். இது குறித்து பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இன்று அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்கள் ஆத்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இது சம்மந்தமாக துறையூர் காவல் துறை ஆய்வாளர் குருநாதன் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். பின்னர் நகராட்சி மேலாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயமாலதி ஆகியோர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு வார காலத்திற்குள் குடிநீர் வசதி சீர் செய்யப்படும் என்றும் உறுதியளித்ததில் போராட்டம் கைவிடப்பட்டது.

செய்திகள்
தின அஞ்சல் திருச்சி மாவட்டம்