கட்சி கொடி கம்பங்களையும் நகராட்சி நிர்வாகம் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி இடித்து தள்ளியதை கண்டித்து போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை ஆட்சியர் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அதிமுக, திமுக , அமமுக, காங்கிரஸ் மற்ற அனைத்து கட்சி ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கிளை செயலாளர்கள், சுமார் 200க்கும் மேற்பட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் திமுக MLA ஸ்டாலின் குமார் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர் தேர்தல் விதிமுறைகளை முதலில் எடுத்துரைத்தார். அப்பொழுது அனைத்து கட்சியினரும் துணை ஆட்சியரிடம் நேற்று பஸ் நிலையம் முன்பாக உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் நகராட்சி நிர்வாகம் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி இடித்து தள்ளியதை கண்டித்து போராட்டம் நடத்தினோம். இதற்கு பலனாக எங்கள் மேல் துறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதலில் இந்த வழக்கினை வாபஸ் பெற்ற பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறி அனைத்து கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
செய்திகள்
திருச்சி மாவட்டம் தின அஞ்சல் செய்தி