சென்னையில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை பயங்கரத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில், பாரபட்சமின்றி விசாரணையை நடத்தி அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடரும் பாலியல் கொடுமைகளை தடுத்திட வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இன்று (மார்ச் 16, 2019) சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அமீர் ஹம்சா வரவேற்புரை நிகழ்த்தினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகமது உசேன், வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென்சென்னை மாவட்ட தலைவர் முகமது சலீம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் வழ.சஃபியா, விமன் இந்தியா மூமெண்ட் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழ.சாஹிரா பானு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் வழ.ராஜா முகமது நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.