4_ம் ஆண்டு கல்வி நிதி உதவி வழங்கும் விழா
4_ம் ஆண்டு கல்வி நிதி உதவி வழங்கும் விழா
கோவை. மார்ச்.17-
கோவை ஸ்ரீநாகசாயி ட்ரஸ்ட் சார்பில் நான்காம் ஆண்டு கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை ஸ்ரீ சாய் டிரஸ்ட் மற்றும் கோவை ஸ்ரீநாகசாயி டிரஸ்ட் சார்பில் கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது ஸ்ரீநாகசாயி டிரஸ்ட் தலைவர் கே எம் கே விஸ்வநாத் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சாய் பாபா வித்யாலயா மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார் ஸ்ரீநாகசாயி trust துணைத்தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். வருமான வரி ஆணையர் வி எஸ் குமார் லலிதா குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நாகசாயி டிரஸ்ட் துணைதலைவர் பாலசுப்ரமணியன் இந்த கல்வி நிதியுதவி ஆனது நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி ஆனது பெறும் மாணவர்கள் கல்வியில் மேன்மேலும் முன்னேறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை ஆனது ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
விழாவில் 105 ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மாணவர்களுக்கும் 44 இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் ஆறு டிப்ளமோ மாணவர்கள் உட்பட மொத்தம் 15 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.