ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஓட்டல் புதிய கிளை திறப்பு

கோவை சுந்தராபுரத்தில்

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஓட்டல் புதிய கிளை திறப்பு

கோவை, மார்ச்.18-

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஓட்டல்கள் கோவை முழுவதும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் 21&வது கிளை கோவை சுந்தராபுரத்தில் திறக்கப்பட்டு உள்ளது. 2 தளங்களை கொண்ட இந்த கிளையை செந்தில் அன்ட் கோ நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரும், சமூக ஆர்வலருமான அன்பரசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இன்டோசெல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். ஓட்டல் அபீஸ் கிரேன்ட் மதன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ரேணுகாதேவி மதன் பெற்றுக் கொண்டார். அபிநயா பன்கட் அரங்கை சுந்தராபுரம் பாலாஜி மருத்துவமனை இயக்குனர் தண்டபாணி தொடங்கி வைத்தார். அபிநவ் அரங்கை கொசிமா தலைவர் சுருளிவேல் திறந்துவைத்தார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில் இந்த கிளையில் ஒரே சமயத்தில் 200 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வசதி இருக்கிறது. 2 பார்ட்டி ஹால், கார் நிறுத்தும் இடம் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு ஓட்டல் மட்டுமின்றி உயர்தர இனிப்பு, காரவகைகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவு பொருட்களும் இடம்பெற்று உள்ளன.

நிகழ்ச்சியில் அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் குழுமங்களின் தலைவர் கே.ராமசாமி, துணைத்தலைவர் சுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இணை நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், செயல் இயக்குனர்கள் கார்த்திக், ஜெகன், விவேக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *