பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா
கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா
கோவை.மார்ச்.18-
கொங்கு மண்டலத்தில் இறந்த பிறகும் மேலை சிதம்பரம் எனும் பெயர் பெற்ற பேரூர் கோவில் தேரோட்டம் பக்தர்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவானது பங்குனி உத்திரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவானது 12.3.2019 அன்று கொடியேற்றம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா யாகசாலை பூஜை மலர் பல்லாக்கு அதை முழுக்க முன் அரண்மனை திருவிளக்கு உடனும், 17 3 2019 ஞாயிற்றுக்கிழமை ஆறாம் நாள் திருவிழாவாக பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வெள்ளையானை சேவையாக கொண்டாடப்பட்டது.
18.3.2019 ஏழாம் நாள் திருவிழாவாக யாகசாலை பூஜை பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் பக்தர்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
திருத்தேரில் மாதம்பட்டி எமன் சிவகுமார் குடும்பத்தாரும் பேரூர் பேரூர் ஆதீனம் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி கைலை புனிதர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் சின்னவேடம்பட்டி கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் பொன்மாரி வாசக சுவாமிகள் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.