மிரே அசட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் – முதலீட்டு துறையில் சிறப்பான சேவை

மிரே அசட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் – முதலீட்டு துறையில் சிறப்பான சேவை

சென்னை, 19 மார்ச் 2019: மிரே அசட் பரஸ்பர நிதிநிறுவனம் இந்தியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலான தனது சேவையை நிறைவு செய்து தற்போது இந்திய பரஸ்பர நிதி தொழிலில் தனது முத்திரையை பதிக்க துவங்கியிருக்கிறது. மிரே அசட் பரஸ்பர நிதி AUM (மேலாண்மைக்குட்பட்ட சொத்துக்கள்) நிறுவனம் முக்கிய தொடக்க எல்லையானஇந்தியா ரூபாயில்25,000* கோடியை எட்டி 2018 ஆம் ஆண்டில் 50% -க்கும் மேற்பட்ட ஒரு வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. AUM வளர்ச்சி விகித அடிப்படையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் AMC -க்களில் மிரே அசட் நிறுவனமும் ஒன்றாகும், மேலும் தொழில் பங்காளர்களும் இதை

அங்கீகரிக்கிறார்கள்.கடந்த 4 ½ ஆண்டு கால பயணத்தில் AUM -ல் 50 மடங்குக்கும் மேற்பட்ட வளர்ச்சியுடன் அது மேலும் அதிகஈர்ப்புடையதாக இருந்தது (கடந்த 31 ஜூலை, 2013 -ம் தேதி நிலவரப்படி AUMஇந்தியா ரூபாயில் 500 கோடியாக இருந்தது). (* ~ விகிதப்பங்கில் 22,000 -மும் கடனில் 3,100 -மாக இருந்தது)
AAUM -ன் அடிப்படையில் முதல் 16 AMC -க்களில் ஒன்றாக இந்த AMC முன்னேறிவிகிதப்பங்கு சொத்துக்களின் அடிப்படையில் இது 12 ஆம் இடத்தில் இருக்கிறது (ஆதாரம்: 28 பிப்ரவரி 2019 -ம் தேதி நிலவரப்படியான ACE MF தரவு). 28 பிப்ரவரி 2019 -ம் தேதி நிலவரப்படி மிரே அசட் நிறுவனம் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மூதலீட்டாளர் ஃபோலியோக்களுடன் (இதில் 6.7 இலட்சத்திற்கும் மேற்பட்ட SIP முதலீட்டாளர்களும் உட்படுவர்)முதலீட்டாளர் ஃபோலியோ எண்ணிக்கையில் ஒரு மாபெரும் எழுச்சியை கண்டுள்ளது. SIP ஒழுக்கும்குறிப்பிடத்தகுந்த அளவு வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் அதுமார்ச் 2016 ஆம் ஆண்டில் இந்திய ரூபாயில்29 கோடியிலிருந்து 10 மடங்கு வளர்ச்சி கண்டு பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில் மாத வருவாயாக இந்தியா ரூபாயில் 290 கோடியை எட்டியது.
மிரே அசட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு. ஸ்வரூப் மொஹன்டி,பின்வரும்படி கருத்து தெரிவித்தார்: “கடந்த ஈராண்டுகளாகமிரே அசட் இந்தியா நிறுவனம்பலமான வளர்ச்சி கண்டுள்ளதுமிரே அசட் நிறுவனத்திற்கு ஒரு மாபெரும் பயணமாக அமைந்திருக்கிறது. நாங்கள் செயல்திறன் பின்தொடர் பதிவேடு, அபாய மேலாண்மை கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் மைய கோட்பாடு ஆகியவற்றை பின்பற்றியதன் வாயிலாகவே இந்த இடத்தை எட்டியுள்ளோம். மேலும் இவைகளே எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோக கூட்டாளிகளின்நம்பிக்கையை வென்றெடுக்க எங்களுக்குரிய ஒரு கருவியாக இருந்தது.SIP ஒழுக்குகளில் காணப்பட்ட வளர்ச்சியே மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒரு சாதனையாகும், மேலும் SIP என்பது ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகிய இருவரும் ஒரு நிறுவனத்திற்காக வாடிக்கையாளர்களை முன்னெடுத்துவரும் ஒரு அழைப்பாகும். எங்கள் மீதுள்ள நம்பிக்கை ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை பார்ப்பது எங்களுக்கு மிகுந்த மகழிச்சியை தருகிறது.எங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு அனுபவத்தை வழங்கி அவர்களுக்குரிய செல்வ உருவாக்க பயணத்தில் உதவுவது எங்களுக்குரிய பெருமுயற்சியாக இருக்கிறது.”
பாரம்பரி விகிதப்பங்கு மற்றும் வைப்பு நிதி வருவாய் திட்டங்களுக்கு கூடுதலாக, மிரே அசட் நிறுவனம் மாற்று திட்டங்களிலும் தனது கவனத்தை செலுத்தியது. மிரே அசட் நிறுவனம் 2018 -ல் துணிகர முதலீடு, மனை வியாபாரம், முதலீட்டு சந்தை மற்றும் மாற்று முதலீட்டு திட்டங்களில் துணிந்து இறங்கியது.
ஹாங்க் காங்க் -ன் விகிதப்பங்கு முதலீட்டு அலுவலகத்திற்கும் மற்றும் கொரியாவின் விகிதப்பங்கு மற்றும் கடன் முதலீடுகள் அலுவலகத்திற்கும் மிரே அசட் (இந்திய) நிறுவனம் ஆலோசனை சேவைகளையும் வழங்கிவருகிறது.மிரே அசட் இந்திய நிறுவனம்28 பிப்ரவரி 2018 -ம் தேதி நிலவரப்படிசொத்துக்களாக உள்ள 650 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான (510 மில்லியன் விகிதப்பங்கு மற்றும் 140 மில்லியன் கடன்) ஆலோசனை சேவைகளையும் வழங்கி வருகிறது.
மிரே அசட் முதலீட்டு சந்தைகள் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக மிரே அசட் குழுமம் 2018 ஆம் ஆண்டில் ஒரு முதலீட்டு வங்கியையும் தரவு வியாபாரத்தையும் துவங்கியது.
மிரே அசட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு. ஸ்வரூப் மொஹன்டி, பின்வரும்படி கருத்து தெரிவித்தார்: “சொத்துப் பிரிவுகளில் எங்களது வியாபாரத்தை நாங்கள் விரிவாக்கம் செய்து எங்கள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு முதலீட்டு தேர்வுகளை வழங்குவது மிரே அசட் நிறுவனத்திற்குஒரு மாபெரும்பயணமாக அமைந்திருக்கிறது.” மேலும் அவர் சொன்னது: “2019 ஆம் ஆண்டு எங்கள் நிறுவனத்திற்கு ஒரு அடையாளமான ஆண்டாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் சொத்துப் பிரிவுகளில் வழங்கிவரும் திட்டங்களை மேலும் வலுவடையச்செய்து வருவதால் 2019 ஆம் ஆண்டு எங்களுக்கு ஒரு உற்சாகமான ஆண்டாக அமையுமென நாங்கள் நம்புகிறோம். எங்கள் நிதிகளின் திருப்திகரமான செயல்திறனில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். அதோடு இந்த நற்செயலை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வோம் எனவும் நாங்கள் நம்புகிறோம்.”
2008 ஆம் ஆண்டு முதல் AMC -க்கென சென்னையில் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. 31 டிசம்பர் 2017 -ம் தேதி நிலவரப்படி இந்திய ரூபாயில் 685 கோடியாக இருந்த சென்னைAMC -ன் AUM 31 ஜனவரி 2019 -ம் தேதி நிலவரப்படி இந்திய ரூபாயில் 1,100 கோடிக்கும் மேலாக அதிகரித்திருந்தது, மேலும் கடந்த ஆண்டில் அது 50% -க்கும் மேற்பட்ட வளர்ச்சியை கண்டுள்ளது. SIP வாயிலாக AMC -க்கு 39,000 முதலீட்டாளர் ஃபோலியோக்கள் கிடைத்துள்ளனர், அதோடு SIP புத்தகம் பிரதி மாதத்திற்கு 17.2 கோடி வருவாயை காட்டுகிறது. மிரே அசட் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு. ஸ்வரூப் மொஹன்டி, பின்வரும்படி கருத்து தெரிவித்தார்: “மிரே அசட் நிறுவனத்திற்கு சென்னை நகரே ஒரு முக்கிய சந்தையாகும்.இங்கு நாங்கள் நல்ல வளர்ச்சியை பார்க்கிறோம், மேலும் இந்த சந்தையில் நாங்கள் எங்கள் நிலையை பலப்படுத்திக்கொள்ளவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த ஆண்டில் கொச்சினையும் ஒரு கிளையாக சேர்த்துக்கொள்ள நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *