வேட்பாளர்களை வரவேற்பதற்காக மேட்டுப்பாளையத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி
மேட்டுப்பாளையத்தில்
கடுமையான போக்குவரத்து நெருக்கடி
இது தேர்தல் காலம்
வேட்பாளர்களை வரவேற்கிறோம் என்று
ஒவ்வொரு கட்சியினரும் போட்டி போட்டு அவரவர் வேட்பாளர்களை வரவேற்பதற்காக எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பாக
வரவேற்பு அளித்து வருகிறார்கள் இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள் ஏற்கனவே மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பதோ இரண்டு சாலைகள் தான் இதையும் முற்றிலும் கட்சியினர்
அவரவர் வேட்பாளர்களை வரவேற்கிறோம் என்ற பெயரில் போக்குவரத்தை அரசியல் கட்சியினர் முற்றிலும் துண்டித்துவிடுகிறார்கள் காவல்துறையினரும் அவர்கள் சக்திக்கு உட்பட்டு போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாலும் அரசியல் கட்சியினர் கூட்டும் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது இதனால் பாதிக்கப்படுவது பொது மக்களும் கோடைகாலம் என்பதால் நீலகிரிக்கு சுற்றுலாவிற்கு வரும் வெளியூர் பயணிகளும் தான் இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்ச்சிகளை
ஊருக்கு வெளியில் வைத்தால் பொதுமக்களும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்
இனிமேலாவதும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்