சர்வதேச கராத்தே போட்டி

சர்வதேச கராத்தே போட்டியில்

கோவையைச் சேர்ந்த மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

கோவை,மார்ச்.18-

சர்வதேச கராத்தே போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர் கோபி கிருஷ்ணா வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அது குறித்து கோபி கிருஷ்ணா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது :-

நான் கோவை என்.ஜி.பி.ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் பி.காம்.2-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை கணேசன். ஆட்டோ டிரைவர் ஆவார். தாய் சுமதி. எனது கராத்தே பயிற்சிப் பள்ளியானது புலியகுளம் மீனா எஸ்டேட் அருகே உள்ள INDO JAPAN SITORIO KARATE TRAINING SCHOOL ஆகும்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டி இம்மாதம் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9-வது உலக ஷிடோரி கராத்தே பெடரேஷன் போட்டியானது 18 வயது முதல் 20 வயதுடையோருக்கான மைனஸ் 60 (-60) தரவரிசை போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியானது 3 சுற்றுக்களாக நடைபெற்றது. இதில் நான் 3-ம் இடம் வென்றதற்காக எனக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. எனக்கு எதிராக விளையாடிய அணி ஜப்பானைச் சேர்ந்தவர் ஆவார். எனது பயிற்சியாளர்களான பி.கே.கதிசேரன் மற்றும் வினிஷா ஆவர். இவர்கள் எனக்கு கொடுத்த ஊக்கமும் பயிற்சியும்தான் இந்த பெருமையை சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *